தலைவர் கலைஞருக்கு - திமுக தொண்டனின் கடிதம்!!!
எங்கள் எழுச்சிமிகு தலைவர் கலைஞருக்கு ,
உங்கள் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பு எழுதும் கடிதமிது........
வெகுநாட்களாய் எம் நெஞ்சங்களில் புதைத்து வைத்திருந்த சிற்சில சந்தேகங்களையும் , ஆதங்கங்களையும் , நீங்கள் இந்த கடிதத்தை படிக்க போவதில்லையாயினும் இங்கே கொட்டவே நான் தீர்மானித்திருக்கிறேன்!!!!
சற்றேறக்குறைய ஒரு நூற்றாண்டு வாழ்நாளை நெருங்கிக்கொண்டிருக்கும் உங்களின் சுறுசுறுப்பு கண்டு இன்றைக்கும் கொடநாட்டில் ஓய்வு எடுக்கும் பலர் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும்...உங்களை தலைவராக அடைந்தமைக்கு நாங்கள் பெருமை கொள்ளத்தான் வேண்டும்!!!!!!!
முற்றிலுமாக காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்தது எங்கள் குடும்பம்....என் தாத்தாவும் , அப்பாவும் தீவிர காங்கிரஸ்காரர்கள் ..!!! இன்றைக்கும் என் அப்பா கதர் சட்டையை மட்டுமே அணிகிறார்.....!!!! இவ்வாறான சூழலில் பிள்ளைகள் மட்டும் கொஞ்சம் மாறிப்போனோம்!!!! தீவிர அனுதாபியாக இருந்து நாட்பட நாட்பட தீவிர தொண்டனாகவும் மாறிப்போனவன் நான்....என் வயதிற்கு நான் அண்ணாவையும் அறிந்தவனல்லன் , பெரியாரையும் அறிந்தவன் அல்லன்......அவர்கள் வாழ்ந்த சமகாலத்தில் வாழ்ந்தவனும் அல்லன்!!! அவர்கள் பற்றி நான் அறிந்ததெல்லாம் உங்கள் மூலமாகவே!!! உங்களின் கரகரப்புக்குரலில் கட்டுண்டு போனவன் நான்!!! இன்றைக்கும் கூட!!!!
எங்கள் குடும்பத்தின் கழகப்பற்றுக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் எங்கள் கிராமத்தின் ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எங்கள் பரம விரோதி சண்முகத்திற்கு , அவர் திமுக சார்பில் நின்ற ஒரே காரணத்தால் மட்டுமே வாக்களித்தவர்கள் நாங்கள்!!!இன்றுவரை அறிந்த நாள் முதல் திமுக தவிர வேறு யாருக்கும் வாக்களித்ததில்லை..!!! வாக்களிக்கவும் போவதில்லை!!!!
காரணம்....??
இன்றைக்கும் தங்களை விட்டால் தமிழகத்திற்கு நாதியில்லை என்பதால் மட்டுமே!!!! ஆயிரத்தெட்டு விமர்சனங்கள் உங்கள் மீது வைத்தாலும் அவற்றையெல்லாம் விஞ்சிய உங்கள் ஆளுமை எங்களை இன்னும் கட்டிப்போட்டே வைத்திருக்கிறது!!!!!!!!
நீங்கள் சன் தொலைக்காட்சியை ஆரம்பித்த போதும் சரி...இன்றைக்கு கலைஞர் தொலைக்காட்சியை ஆரம்பித்த போதும் சரி........அதை கண்மூடித்தனமாக ஆதரித்தவர்கள் நாங்கள்......இன்றைக்கும் ஆதரித்துக்கொண்டிருப்பவர்கள் நாங்கள்......அது கழகத்தின் தொலைக்காட்சி , கழக ஆதரவு தொலைக்காட்சி என்ற ஒரே காரணத்தை தவிர வேறென்ன உண்டு?????
இன்னும் ஆதரிப்போம்!!!! ஆரம்பித்த சில நாட்களுக்குள்ளாகவே இரண்டாமிடத்தை பிடித்ததற்கு காரணமும் அனைவரும் அறிந்ததே!! இன்னும் கூடிய விரைவில் முதலிடத்தையும் பிடிக்க்கப்போவதை இந்த நாடு பார்க்கத்தானே போகிறது.....அதற்கு காரணம் , கழகத்தை தம் கண் போல் கருதும் உடன்பிறப்புக்களும் ஒன்று என்ற உண்மை உள்ளங்கை நெல்லிக்கனி!
இவைகளெல்லாம் ஒருபுறம் இருப்பினும் , சமீப காலமாக சில நிகழ்வுகள் அல்லது சில விடயங்கள் எங்களையும் சங்கடப்படுத்துபவைகளாகவே இருக்கின்றன..........கழகப்பற்றையும் தாண்டிய கவலைகள் அவை.....அக்கவலைகளும் கூட கழகத்தை விமர்சிக்கும் போக்கில் எழுந்தவைகள் அல்ல.........ஒரு சாமான்ய திமுக தொண்டனுக்குண்டான ஆதங்கங்கள் என்றே வைத்துக்கொள்ளலாம்...!!!!!
· மின்வெட்டே தமிழகத்தில் இல்லை என்றே அனுதினமும் பத்திரிகைகளில் பேட்டி யளிக்கும் மாண்புமிகு மின் துறை அமைச்சர் திரு.ஆற்காட்டார் அவர்களுக்கு "கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை" என்கிற மாபெரும் உண்மை புரியாதது ஏன்??? இவ்வாறு பத்திரிகைகளுக்கு பேட்டியளித்து மேலும் மக்களை எரிச்சலுக்குள்ளாக்குவது ஏன்???
· உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துச்சொல்லி மின் விநியோகத்தை சீர்படுத்த முயற்சிப்போம் என்று வெளிப்படையாக சொல்வதில் என்ன சிரமம்??? அதை விடுத்து , சிறு வயதுக் குழந்தை தன் தாயின் முந்தானையை பிடித்துக்கொண்டே அலைவதைப்போல நீங்கள் எங்கே சென்றாலும் உங்கள் பின்னாலேயே பின் தொடர்வது , ஆற்காட்டார் போன்ற தலைசிறந்த அரசியல்வாதிக்கு அழகா??? ஆற்காட்டார் தம் துறையில் கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டை மேலும் வலுப்படுத்தும் என்பதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார் தலைவர் ஆற்காட்டார்????
· இலவச வண்ணத்தொலைக்காட்சி திட்டம் தமிழக மக்கள் பெரும்பாலானோர் விரும்பாத திட்டமென்பதும் , திமுக தொண்டன் கூட உங்கள் மேலான ஆட்சியின் சாதனைகளை விளிக்கும்போதுகூட அதை விடுத்தே சொல்ல வேண்டிய சங்கடம் இருப்பது தெரியுமா???? இன்றைக்கும் , நாம் திமுகவின் தனிப்பெரும்பான்மையை கடந்த தேர்தலில் இழக்கக்காரணம் இந்த இலவச வண்ணத்தொலைக்காட்சி என்பதை புரிந்துகொள்வீர்களா???
· ஈழத்தமிழர் பிரச்சினையில் நீங்கள் ஆழ்ந்த மெளனம் , சற்றேறக்குறைய உறங்குவது போலத்தான் இருந்தீர்கள் என்பதை நாடென்ன , அனைத்து தரப்பினரும் உணர்வார்கள்.....சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் போதுகூட அமிர்தலிங்கம் கொலை பற்றியெல்லாம் சொல்லி அத்தீர்மானத்தை மேலும் முன்னெடுத்துச்செல்ல சில சங்கடங்கள் ஏற்பட்டதையும் நாடறியும்..........அதற்கு மேலும் நாம் தூங்கவில்லை , தூங்கவில்லை என்று தோழர் நல்லகண்ணுவிற்கான தங்கள் பதில் , திமுகவின் நிலையை மேலும் பலவீனப்படுத்தும் என்பதை உரிமையுடனே நான் எடுத்துக்காட்ட விளைகிறேன்...!!!!!
· கம்யூனிஸ்ட் தோழர்களின் பால் நமக்கு சங்கடம் உண்டெனினும் , கம்யூனிஸ்ட்களும் கூட இந்த ஈழத்தமிழரின் பாலான அக்கறை என்ற போர்வையில் அரசியல் சதுரங்கம் நடாத்தவே இந்த உண்ணாவிரதத்தை உபயோகித்துக்கொண்டார்கள் என்பதில் சந்தேகம் இல்லையெனினும் , பிரச்சினையின் தீவிரத்தை குறைக்கும் முகமாய் இத்தகைய விமர்சனங்கள் ஈழத்தமிழர்களுக்கு மேலும் மனக்குறையை அதிகப்படுத்தும் என்பதை நாம் உணர்ந்தோமா?????
· நேற்றுவரை இருந்த தயாநிதி மாறனும் , கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனது கழகத்தின் மூலமாக!!!முரசொலி மாறனின் மகன் என்பதைத்தவிர அவருக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை!!!! அவரை நாம் ஏற்றுக்கொண்டதும் நீங்கள் சொன்ன ஒரே காரணத்துக்காகவே!!!!!! இன்றைக்கு மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கவிஞர் கனிமொழி அவர்களை நாம் ஏற்றுக்கொண்டதும் உங்கள் மகள் என்பதனால் மட்டுமே..!!!!!!!!!!! அதுமட்டுமின்றி உங்கள் வாரிசுகளின் திறமைகள் மக்களால் அங்கீகரிக்கப்பட்டன என்பதை ஸ்டாலின் அவர்களின் பணிகளும் , தயாநிதி மாறன் அவர்களின் பணிகளும் மக்களால் பாராட்டப்படுவதின் மூலமே உணர்ந்து கொள்ளலாம்!!
· நாடறிந்த ஒரு தலைவரின் வாரிசுகளுக்கு அவர்களை அறியாமலேயே அந்த வாய்ப்புக்கள் தன்னையறியாமலேயே வந்து சேர்கிறது என்பதை அறியாதவர்களல்ல நாம்!!!!!!! அதனால் இந்த உலகத்தில் வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டை யார்மீதும் நம்மால் வைக்க இயலாது என்பதையும் நாம் அறிவோம்!!!!!!! ஆனாலும் நேற்று நடந்த "காதலில் விழுந்தேன் " திரைப்படத்திற்கான சண்டைகள் "திமுக " என்ற மாபெரும் இயக்கத்தின் மாண்புகளை குழி தோண்டி புதைப்பது போல இருப்பதை என்றைக்காவது நீங்கள் உணர்ந்ததுண்டா????
· கனிமொழி , ஸ்டாலின் , அழகிரி , மாறன் என்ற அதிகார மயங்கள் தங்களால் உருவாக்கப்பட்டவைகள் தானே????? கட்சியின் அடிப்படைக்கட்டுப்பாட்டையே குலைக்கும் அளவிற்கு அந்த அதிகார மையங்கள் இன்று தலை விரித்தாடுகின்றனவே??????? என்ன செய்துதான் அதை தடுக்க இயலும்???? தயாநிதி மாறன் போன்றவர்களை இந்த அளவிற்கு தூக்கி வைத்துக்கொண்டாடுவதற்கு என்னதான் காரணம்?? இப்படி தூக்கிப்போட்டு மிதிப்பதற்கு காரணம் என்ன??? இன்றைக்கு நாமே நமக்கு ஏன் எதிரிகளை உருவாக்கிக்கொண்டோம்?????
· எல்லாம் தெரிந்ததாக தனக்குத்தானே சொல்லிக்கொண்டு , எந்நேரமும் தங்களை அர்ச்சிப்பதையே தொழிலாக்கக்கொண்டிருக்கும் "எதுவுமே உணர்ந்தறியாத" ஞானி போன்றவர்கள் உங்களை விமர்சித்த போது , உங்கள் முதுமையை கிண்டலடித்த போது , அதை முழுமூச்சாய் பற்பல கட்டுரைகள் மூலமாயும் - விகடன் அலுவலகத்திற்கு பற்பல தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாயும் அழுத்தத்தை கொடுத்தவர்கள் நாங்கள்...இன்றைக்கு இருவது வயது இளைஞர் செய்ய இயலாத காரியங்களையும் , வேலைகளையும் 85 வயது இளைஞரான நீங்கள் செய்வது கண்டு நாங்கள் பெருமைப்படுகிறோம்!!!!!!
· ஆனாலும் , முதுமையான இந்த வயதில் , கட்சியின் முக்கிய தலைவர்களான பேராசிரியர் , ஆற்காட்டார் , கோசி மணி இன்னும் பலர் முதுமையை எட்டுகின்ற ஒரு வேளையில் கட்சிக்கு புத்துணர்வு ஊட்ட வேண்டியது மிகுந்த அவசியம்...அதற்கு இளைய தலைமுறையிடம் ஆட்சிப்பொறுப்புக்களை ஒப்படைத்துவிட்டு சீனியர் தலைவர்கள் கட்சிப்பொறுப்பை பார்த்துக்கொள்வதே உடனடித்தேவை..........
· ஸ்டாலின் அவர்களை சற்றேறக்குறைய கட்சியின் எல்லா மட்டங்களிலும் ஏற்றுக்கொண்ட ஒரு சூழலில் இன்னும் அவரை முதல்வராக்குவதை எந்த சக்தி தடுக்கிறது என்றே புரியாமல் விழித்துக்கொண்டிருப்பது தமிழக மக்கள் மட்டுமல்ல ...ஒவ்வொரு திமுக தொண்டனும் கூடத்தான்....!!! உங்களுக்குப்பின்னும் கட்சி தன் இடத்தை தமிழகத்தில் தக்கவைத்துக்கொள்ள இதுவே வழி....இதைத்தவிர வேறெதுவுமில்லை!!!!
· "ஸ்டாலின்" அவர்கள் தாம் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு பொறுப்புக்களையும் உங்களின் எதிர்ப்பார்ப்பை விஞ்சி நிறைவேற்றி இருக்கிறார் என்பதை தாங்களும் உணர்வீர்கள் !!!! !தமிழக மக்களும் உணர்வார்கள்...இத்தகையதொரு சூழல் மறுபடியும் கிட்டுமா , ஸ்டாலினுக்கு மகுடம் சூட்ட இதைவிட சிறந்த தருணம் உண்டா என்று கேட்டால் இல்லையென்று சொல்லவே நான் தலைப்படுவேன்...இது உண்மைதானே???
இன்னும் நிறைய..கண்டிப்பாக உங்கள் தொண்டர்களின் உணர்வுகள் புரியுமென்றே நினைக்கிறோம்....எமது ஆதங்கங்கள் களையப்படும் நாளை வெகு விரைவில் எதிர்பார்க்கிறோம்.....
இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு "திமுக" என்னும் மாபெரும் விருட்சம் தளைத்தோங்கி மக்கள் இளைப்பாற வழிவகை செய்யும் என்றே நாம் நம்புகிறோம்.....
பாசமிகு உடன்பிறப்பு....!!!!!
பெட்டிக்கடை "துரை"
Kindly subscribe / Comment on Blog
Bulls – Back to Explore