இந்த வாரம் காதல் வாரம் என சானல்கள் அலற, எல்லா பத்திரிக்கைகளிலும் ஸ்ரேயாவிலிருந்து வடிவேலு வரை தனது இளமைகால காதல் பற்றி பேச,பீச்களில் போலீஸ் ரோந்து அதிகரிக்க,சுஜாதா படுக்கையில் இருந்தாலுல் 'காதலிலே இரண்டு வகை' எழுத, பொக்கேக்களும்,ரோஸ்களும் விற்பதை 'சிறப்பு பார்வையில்' காட்ட ...நான் மட்டும் சும்மா இருக்கலாமா என்ன ..அதான் இந்த வாரம் முழுதும் காதல் பற்றி எழுதலாமென முடிவு செய்துள்ளேன்...படிங்க ரசிங்க...
பேசவேண்டியதை தவிர மற்றவையெல்லாம் பேசி விட்டுதொலைபேசியை வைக்கும் போதுஇருவரும் விடும் பெருமூச்சில் ஒளிந்திருக்கிறது காதல்...
நாம் ஒன்றாய் சுற்றும் போது எதிர்படும் என் நண்பர்களிடம்உன்னை தோழியென்று அறிமுகப் படுத்த கஷ்டமாயிருக்கிறதுநீ எப்படி தான் சமாளிக்கிறாயோ....
யாருக்கும் தெரியாமல் எல்லாரும் காதலித்துக் கொண்டிருக்கநான் உனக்கு தெரியாமல் உனையும் நீ எனக்கு தெரியாமல் எனையும்காதலித்துக் கொண்டிருக்கிறோம்.....
நமக்கிருவருக்கும் தனிமை வாய்க்கும் போதுஎங்கே தோற்று விடுவோமோஎன பயந்து கொண்டு போட்டி போட்டுக் கொண்டுபேசுகிறோம் அர்த்தமற்று...................
காதலை பறிமாறிக் கொள்வதற்கு முந்தையஅந்த உணர்வை எவ்வளவோமுயன்றும் வார்த்தைகளால் வடிக்க முடிவதில்லை தான்...
February 15, 2010 at 2:26 PM
Valentines Day special news very nice