சரி.. எப்படி காதலிக்கனும்.. யாரை காதலிக்கனும், எப்படி காதல சொல்லனும்னு Small tips (Not my experience)
For true love every day is a valentinesday...! --- Bulls ---
பசங்களுக்கு:
முதல்ல. ஒரு பொண்ண கண்டுபிடிக்கனும். எப்படி?
அந்த பொண்ணுக்கு எந்த qualification இருக்கோ இல்லையோ.. இரண்டு qualifications முக்கியம். முதல்ல, அவ வேற யாரையும் காதலிக்க கூடாது. இரண்டாவது என்னனு கடைசில சொல்லறேன். சரி. அப்படி ஒரு பொண்ண கண்டுபிடிச்சுடீங்களா. இப்ப, அந்த பொண்ணு உங்க ரேஞ்சில இருக்கனும். அதாவது, கண்ணாடி முன்னாடி போனா, நீங்க எப்படினு உங்களுக்கு தெரியும். அழகு, smartness, attitude, humor sense இதெல்லாம் வைச்சு, (நம்ம பொண்ணுங்களுக்கு மார்க் போடுவோமே) நமக்குனு ஒரு மார்க் இருக்கும். அந்த ரேஞ்சுக்கு கொஞ்சம் முன்ன பின்ன பொண்ணு இருக்கலாம். ரொம்ப கம்மியாகவோ, ரொம்ப கூடவோ இருந்தா, பொண்ணுக்கு நம்மை பிடிக்காம ரிஜக்ட் செய்ய வாய்ப்புகள் அதிகம். (ஆனா, உண்மை காதலுக்க்கு, எப்படி இருந்தாலும் சரி ). So, இப்போ, பொண்ண செலக்ட் செய்தாச்சு!
இரெண்டாவது, அந்த பொண்ணு மேல காதல் வரணும்.
இதெல்லாம் எப்படினு சொல்ல முடியுமா! காதல் வரலனா ஒன்னும் செய்ய முடியாது...சரி சரி.. அழாதீங்க. தபூஷங்கர் கவிதைகள் படிங்க. கண்டிப்பா காதல் மேல ஒரு ஆசை வரும். அப்படியும் வரலனா, நிறைய தமிழ் சினிமா பாருங்க.. காதலுக்கு மரியாதை, சேது, இப்படி ... தானா வரும்.
மூன்றாவது, அந்த பொண்ணு கிட்ட காதலை சொல்லனும்.
நீங்க நண்பனா பழகுவீங்களோ, இல்ல வழியறீங்களோ, ஆனா சொன்னா தான் காதல். காதல் சொல்லவே தைரியம் இல்லனா, ரொம்ப கஷ்டம். லவ் லெட்டர் எல்லாம் so old fashion. பொண்ண நேர்ல பார்க்க முடிஞ்சா, அவ கண்ண பார்த்து (Note this point, காதலிக்கிற பொண்ண கண்ணுல மட்டும் தான் பார்த்து பேசனும்.. unless நீங்க கருப்பு கண்ணாடி போட்டு இருந்தா) "நான் உன்னை காதலிக்கின்றேன்" அப்படினு நச்சுனு சொல்லனும். அப்போ தான் பொண்ணுக்கும் ஒரு நம்பிக்கை வரும். சரி. கடைசி வரை வச்சு காப்பாத்துவான்னு! நேர்ல பார்க்க முடியலையா, ஒரு போன்ல சொல்லுங்க. ஆனா, பொண்ணு சுதாரிச்சு, அவ உண்மையான உணர்வை மறைப்பதற்க்குள், அதை கண்டுகொள்ளும் படியான ஒரு மீடியா அவசியம்.
நான்காவது, அந்த பொண்ணு, ரிஜக்ட் செய்தால் என்ன செய்ய.
கண்டிப்பா, எந்த பொண்ணும், உங்களை காதலிச்சா கூட உடனே ஒத்துக்கொள்ள மாட்டா. அதுனால, கொஞ்சம் பொறுமை வேணும். (Again, note this point,. கொஞ்சம் தான் பொறுமை வேணும். லூசு மாதிரி, 5 வருஷமா பின்னால சுத்த கூடாது. காதல் ஒரு முறை தான் வரும். அதுவும் ஒருத்தர் மேல தன் வரும் அப்படினு சினிமா டயலாக் பேசனீங்கனா, சேது மாதிரி தான் கடைசில ஆகுவீங்க). ஒரு பொண்ணு மேல நீங்க உண்மையாகவே அக்கறையும், அன்பும் காட்டினா, கண்டிப்பா புரிஞ்சிப்பா.
ஐந்தாவது, இது எதுவுமே ஒத்து வரலனா..
Pls go to step one.சரி, கடைசியா பொண்னு செலக்ட் செய்ய, இரண்டாவ்து criteria சொல்லறேன்னு சொன்னேன் இல்ல..அவ இந்த பதிவ படிச்சு இருக்க கூடாது! வேற என்ன ;)
-------------------------------------------------------------------------------------------------
பெண்களுக்கு:
Very simple பையன பார்த்து லேசா சிரிங்க. அதுக்கு மயங்கலனா, வேலைக்கு ஆகாது.
Post a Comment
Thanks for the valuable comment, Will publish it shortly - Bulls